×

மேம்பாலம் கட்டும் பணிக்காக உக்கடம்-ஆத்துப்பாலம் இடையே இன்று முதல் போக்குவரத்து மாற்றம்

கோவை: கோவை உக்கடம்-ஆத்துப்பாலம் வரை ரூ.216 கோடியில் 1.95 கி.மீ தூரத்துக்கு 55 தூண்கள் அமைக்கப்பட்டு மேம்பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. தற்போது அமைக்கப்பட்ட தூண்களில் உத்திரம் (குறுக்குச் சட்டம்) ெபாருத்தும் பணி இன்று துவங்கியது. இதில் ஒவ்வொரு உத்திரமும் 60 டன் எடை கொண்டவை. போக்குவரத்து நெரிசலால் இப்பணி பாதிக்காமலிருக்க இன்று காலை முதல் இப்பாதையில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி உக்கடத்திலிருந்து ஆத்துப்பாலம் வரை முதல் கட்டமாக பஸ், லாரி உள்ளிட் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு மாற்றுப்பாதையில் விடப்பட்டுள்ளன. படிப்படியாக இன்னும் 10 நாளில் இலகு ரக வாகனங்கள், பைக் உள்ளிட்டவை மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட உள்ளது. இதையொட்டி போக்குவரத்தை ஒழுங்குபடுத்த கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணிக்கு நியமிக்கப்பட்டுள்ளனர்.

இது குறித்து கோவை போக்குவரத்து உதவி கமிஷனர் ராஜ்ண்ணா கூறியதாவது: உக்கடம் -ஆத்துப்பாலம் முதல் மேம்பாலம் கட்டுமான பணிக்காக தூண்களில் உத்திரம் பொருத்தும்ப ணி நடக்கிறது. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படாமலும் பணிகள் பாதிக்காமலும் இருக்க இன்று முதல் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி முதல் கட்டமாக பஸ், லாரிகள் உக்கடம் -ஆத்துப்பாலம் வழியாக செல்ல இன்று முதல் தடை செய்யப்பட்டுள்ளது. இன்னும் 10 நாளில் படிப்படியாக அனைத்து வானகங்களுக்கும் இத்தடை கொண்டு வரப்படும். இனி மாற்றுப்பாதையான உக்கடம் சந்திப்பில் இருந்து பாலக்காடு, பொள்ளாச்சி செல்ல வேண்டிய வாகனங்கள் பேரூர் புறவழிச்சாலை, சேத்துமா வாய்க்கால் சந்திப்பு, புட்டுவிக்கி சாலை, சுண்ணாம்பு காளவாய் வழியாக பாலக்காடு மற்றும் பொள்ளாச்சி சாலைகளை அடைந்து செல்ல வேண்டிய இடங்களுக்கு செல்லலாம். மாற்றுப்பாதையில் போக்குவரத்து நெரிலை ஒழுங்குபடுத்த 60 போக்குவரத்து போலீசார், 20 சிறப்பு காவல்படையினர், 20 ஊர்காவல்படையினர், மற்றும் உள்ளூர் போலீசார் 20 பேர் என மொத்தம் 120 போலீசார் தினமும் காலை முதல் மாலை வரை சுழற்சி முறையில் ஈடுபடுத்தப்படுவர். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : transit transit ,Sappho ,Udakadam , Ukkadam, attuppalam
× RELATED வீட்டை காலி செய்ய அவகாசம் உக்கடம் பகுதி மக்கள் மனு